» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

திமுகவில் சேர்வதாக இருந்தால் 1983ல் கருணாநிதி அழைத்தபோதே சேர்ந்திருப்பேன்: கமலஹாசன் பேச்சு

வியாழன் 10, ஆகஸ்ட் 2017 10:50:30 PM (IST)தேசிய கீதத்தில் திராவிட என்ற வார்த்தை இருக்கும் வரை திராவிடம் இருக்கும் கமலஹாசன் கூறியுள்ளார்.

சென்னையில் முரசொலி பவளவிழா  கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த், கமலஹாசன், பிரபு, உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர்.  விழாவில் நடிகர் கமல்ஹாசன் வாழ்த்துரை வழங்கி பேசியதாவது: நான் வயது வந்தது முதல் கருணாநிதியின் ரசிகனாக இருந்து வந்திருக்கிறேன். நடிகர் ரஜினிகாந்த் இந்த விழாவுக்கு வருகிறாரா? என்று கேட்டேன். அவர் வருகிறார், வந்து பார்வையாளர் இடத்தில் அமர்கிறார் என்று சொன்னார்கள். ரஜினிகாந்தும் மேடைக்கு வந்தால், அவர் கையை பிடித்துக்கொண்டு நானும் நின்றுகொள்ளலாம், வம்பில் மாட்டிக்கொள்ளமாட்டோம் என்று நினைத்தேன்.

விழாவுக்கான அழைப்பிதழை கொடுத்துவிட்டு சென்றதும், கண்ணாடியை பார்த்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தேன். அப்போது ‘அடேய் முட்டாள் எவ்வளவு பெரிய வாய்ப்பை இழக்கிறாய்.. இந்த விழா எப்படிப்பட்ட விழா என்பதை முதலில் புரிந்துகொள்’ என்று தோன்றியது. தற்காப்பு முக்கியம் இல்லை, தன்மானம் தான் முக்கியம். ஏன் அப்படி சொல்கிறேன் என்றால், இந்த மேடையில் வீற்றிருக்கும் பெரிய பத்திரிகை ஆசிரியர்களுடன், பாதியில் பத்திரிகை நடத்தமுடியாமல் பாதியில் நிறுத்திய கடைநிலை பத்திரிகை ஆசிரியராக இந்த மேடையில் அமரும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. இது மாபெரும் வாய்ப்பு, அவர்களுடன் அமர தகுதியானவனா? என்பதை யோசித்து பார்க்காமல் வாய்ப்பை பறித்துக்கொண்டேன்.

அந்த விழாவுக்கு(முரசொலி பவள விழா) சென்று கழகத்தில்(தி.மு.க.) சேர்கிறீர்களா? என என்னை கேட்கிறார்கள். சேர்வதாக இருந்தால் 1983–ல் கருணாநிதி அனுப்பிய ஒரு ‘டெலிகிராம்’ எனக்கு வந்து சேர்ந்தது. அது ஓரு கேள்வி. அந்த பெரும்தன்மையை நான் இன்றும், என்றும் மறக்கமாட்டேன். நீங்கள் ஏன் தி.மு.க.வில் சேரக்கூடாது? அந்த ‘டெலிகிராமை’ வெளியில் காட்டவும் தைரியம் இல்லை. பதில் சொல்லவும் தைரியம் இல்லை. அதை மடித்து உள்ளே வைத்துவிட்டேன். பதில் இன்று வரை சொல்லவில்லை. அவரது பெருந்தன்மை என்னவென்றால் மறுபடியும் அவர் கேட்கவில்லை. 

அது மூதறிஞர்களுக்கு, பெரியவர்களுக்கே உரித்தான தன்மை. அந்த மரியாதை இந்த மேடையிலும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வந்திருக்கிறேன். ஒருவரை ஒருவர் விமர்சித்தும், கிண்டல் அடித்தும் பேசியவர்கள் எல்லாம் இந்த மேடையில் இருக்கும் இந்த ஒரு புதிய கலாசாரத்தை நானும் பயில இந்த மேடைக்கு வந்திருக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் நடிகர் ரஜினி காந்த், கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து, சன் குழும தலைவர் கலாநிதி மாறன், தயாநிதி மாறன், ஆலந்தூர் பாரதி, சண்முகநாதன், முரசொலி ஆசிரியர் செல்வம், முன்னாள் பொறுப்பாசிரியர் சொர்ணம் உள்ளிட்டோருக்கு ஸ்டாலின் நினைவுப்பரிசு வழங்கினார்


மக்கள் கருத்து

ஒருவன்Aug 13, 2017 - 07:02:58 AM | Posted IP 59.96*****

ஏம்பா தனியா கட்சி ஆரம்பிக்கலாமே... கலப்பட தமிழன் தெலுங்கன் நடிகன் சுடாலின் கு எதுக்கு கூட்டணி ??

தம்பிAug 12, 2017 - 10:23:35 AM | Posted IP 117.2*****

மொதல்ல நீ சேரு- திமுகவுக்கு பால் ஊத்திருவாங்க எல்லாரும்

தமிழன்Aug 12, 2017 - 10:15:00 AM | Posted IP 180.2*****

ஊழலோடு கூட்டணி வைத்தது மேடையில் பேசும் நீங்கள் ஊழலுக்கு எதிராக பேசுறீங்களா ?? சுயநலவாதி கமல் ......மக்களை முட்டாள் அக்கா பார்க்காதீர்கள் ...

rajaAug 11, 2017 - 01:30:57 PM | Posted IP 117.2*****

ஆக மொத்தத்தில் திராவிட இயக்கத்தில் சேர எப்பவுமே விருப்பம் இல்லையே அப்படித்தானே

saamyAug 11, 2017 - 01:10:42 PM | Posted IP 117.2*****

விஸ்வரூபம் - சொன்னதுபோல - நாட்டை விட்டு ஓடிவிடு

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

crescentopticals

Friends Track CALL TAXI & CAB (P) LTDJohnson's Engineers
New Shape Tailors


Thoothukudi Business Directory