» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

ஓபிஎஸ் உட்பட11 பேர் மீது கட்சி தாவல் தடை சட்டத்தில் நடவடிக்கை : திமுக வழக்கு

திங்கள் 25, செப்டம்பர் 2017 8:12:28 PM (IST)

துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 பேர் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் திமுக கொறடா வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஜெ.,மறைவிற்கு பின்னர் அதிமுக இரண்டாக உடைந்தது.இதில் அம்மா அணி புரட்சி தலைவி அம்மாஅணி என அணிகள் பிரிக்கப்ப்பட்டு அவற்றிற்கு தனித்தனியே சின்னங்கள் ஒதுக்கப்பட்டது. 

தற்போது இரு அணிகளும் ஒன்றிணைந்து ஓபிஎஸ் துணை முதல்வரானார். இந்நிலையில் திமுக கொறடா சக்கரபாணி இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். 

அதில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 11 பேர் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.இந்த மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.   நாளை மறுநாள்(27.9.2017) இதன் மீதான விசாரணை நடைபெறுகிறது.


மக்கள் கருத்து

சாமிSep 26, 2017 - 05:10:13 PM | Posted IP 160.2*****

காலம் கடந்த கவலை உனக்கு தேவையா சுடலை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsNalam Pasumaiyagam


selvam aqua

Johnson's Engineers

CSC Computer Education


New Shape Tailors

Sterlite Industries (I) Ltd

Universal Tiles BazarThoothukudi Business Directory