» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அதிர்ஷ்டசாலி : மணிமண்டப விழாவில் ரஜினிகாந்த்

ஞாயிறு 1, அக்டோபர் 2017 12:21:56 PM (IST)


துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஒரு அதிர்ஷ்டசாலி என்பது மீண்டும் நிரூபணமாகி உள்ளது என்று நடிகர் ரஜினிகாந்த், சிவாஜி மணிமண்டபம் திறப்பு விழாவில் பேசியுள்ளார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 90 வது பிறந்தநாளையொட்டி சென்னை அடையாறில் அமைக்கப்பட்டுள்ள அவரது மணி மண்டபத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். இவ்விழாவில்  நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஷால், கார்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் அமைச்சர்கள், தமிழ் திரையுலகினர், நடிகர் சங்க நிர்வாகிகள் நாசர் உள்ளிட்ட ஏராளமானோர் சிவாஜி மணிமண்டபம் திறப்பு விழாவில் பங்கேற்றனர்.

விழாவில் பேசிய ரஜினிகாந்த் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ரொம்ப அதிர்ஷ்டசாலி. அது பலமுறை நிரூபணமாகியுள்ளது. காலகாலத்துக்கும் உயர்ந்து நிற்கப் போகும் இந்த மணிமண்டபத்தை திறக்கும் பாக்கியம் ஓ.பி.எஸ்ஸுக்கு கிடைத்துள்ளது. நடிகர் சிவாஜி கணேசன் நடிப்பில் சக்ரவர்த்தி. நடிப்பில், பாவனையில்,வசன உச்சரிப்பில், நடையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவர். கடவுள் மறுப்பு உச்சத்தில் இருந்தபோது சிவாஜி ஆன்மீக படங்களிலும் நடித்தவர் என்றார்.

இதனிடையே சிவாஜியின் அரசியல் வாழ்க்கை குறித்து பேசிய ரஜினிகாந்த் அரசியலில் வெல்ல பெயர், புகழ் மட்டும் போதாது. அதற்கு மேல் என்ன வேண்டும் என்பது நடிகர் கமல்ஹாசனுக்கு தெரியும். இரண்டு மாதங்களுக்கு முன் கேட்டிருந்தால் அரசியலில் வெற்றி பெறும் ரகசியத்தை கமல்ஹாசன் கூறியிருப்பார் என்று குறிப்பிட்டார். அப்போது அரங்கமே சிரிப்பு ஒலியில் நிறைந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

selvam aqua

Johnson's Engineers




Nalam Pasumaiyagam


Universal Tiles Bazar


New Shape Tailors

CSC Computer Education



Thoothukudi Business Directory