» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

திமுகவில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தினால் ஸ்டாலின் தோற்றுவிடுவார் : அமைச்சர் ஜெயக்குமார்

செவ்வாய் 3, அக்டோபர் 2017 11:53:46 AM (IST)

திமுகவில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தினால் ஸ்டாலின் தோற்றுவிடுவார் என்று தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், இலங்கை வசம் உள்ள தமிழக மீனவர்களின் 36 படகுகளை மீட்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.  சட்டமன்றத் தேர்தலை திமுக எம்எல்ஏக்கள் விரும்பவில்லை. திமுகவில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தினால் ஸ்டாலின் தோற்றுவிடுவார். தமிழகத்தில் ஆளும் பழனிசாமி தலைமையிலான அரசுக்கு அறுதிப் பெரும்பான்மை இருக்கிறது. 

தனிப்பட்ட முறையில் முதல்வர் பழனிசாமியை விமரிசிப்பது சரியல்ல. மறைந்த முதல்வர் வாழ்ந்த வேதா இல்லம் பொதுமக்களின் பார்வைக்கு விட விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். சட்டத்திற்கு உட்பட்டவர்கள் காவல்துறையைப் பார்த்து பயப்பட வேண்டியதில்லை. சட்டத்திற்கு உட்பட்டுதான் தினகரன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.


மக்கள் கருத்து

மக்கள்Oct 4, 2017 - 03:24:15 PM | Posted IP 117.1*****

நீங்கள் ஜெயித்துவிடுவீர்களா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD







New Shape Tailors

crescentopticals

Johnson's Engineers





Thoothukudi Business Directory