» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

தேர்தலுக்குத் தயாராகுங்கள்: மு.க.ஸ்டாலின் உத்தரவு

வெள்ளி 2, பிப்ரவரி 2018 11:25:44 AM (IST)



தேர்தல் எந்த நேரத்தில் வந்தாலும் அதை சந்திக்கத் தயாராகுமாறு திமுகவினருக்கு அந்தக் கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

திமுகவில் உள்ள 65 மாவட்ட நிர்வாகிகளையும் நேரில் சந்தித்து மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்துவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, கோவை மாநகர் வடக்கு மற்றும் மாநகர் தெற்கு மாவட்ட நிர்வாகிகள், நீலகிரி மாவட்ட நிர்வாகிகளை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் நேற்று சந்தித்தார். இதன் தொடக்க நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர் க.அன்பழகன், முதன்மைச் செயலாளர் துரைமுருகன் ஆகியோர் பங்கேற்றனர். 

நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசியது: கோவை மாவட்டத்தில் நடைபெறும் பிரச்னைகளை முழுமையாக நான் அறிவேன். அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்.  எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்படும்.  திமுகவில் உழைக்கும் சாதாரண தொண்டனுக்கும் நீதி கிடைக்கும்.  எப்போது தேர்தல் வந்தாலும் அதைச் சந்திக்க திமுகவினர்  தயாராக இருக்க வேண்டும். அதற்கேற்ப பணியாற்ற வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 5 பெண்கள், 5 ஆண்களைக் கொண்ட குழு ஒன்றை எல்லா இடங்களிலும் அமைத்து, இல்லந்தோறும் சென்று அதிமுக ஆட்சிக்கு எதிராக திண்ணைப் பிரசாரத்தில் திமுகவினர் ஈடுபட வேண்டும் எனவும்  நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அண்ணா  அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. அறிவாலயத்தின் முன் பகுதியில் தடுப்பு அரண் அமைத்து முக்கிய நிர்வாகிகள், பத்திரிகையாளர்கள், தொண்டரணியைச் சேர்ந்தவர்களைக் கூட உள்ளே அனுமதிக்காமல் மு.க.ஸ்டாலின் மட்டும் தனியாக அமர்ந்து நிர்வாகிகளைச் சந்தித்தார்.  இந்த நிகழ்வுக்கான அடையாள அட்டை வைத்திருந்த நிர்வாகிகள் மட்டும் அனுமதிக்கப்பட்டு, இருபது இருபது பேராக ஸ்டாலினைச் சந்தித்தனர்.

நிர்வாகிகளைச் சந்தித்தபோது, தீர்வு காணும் பெட்டி ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. அதில், மு.க.ஸ்டாலினிடம் வெளிப்படையாகத் தெரிவிக்க முடியாத கருத்துகளைப் பெட்டியில் நிர்வாகிகள் போட்டனர். தீர்வு கிடைக்குமா?: மு.க.ஸ்டாலினைச் சந்தித்த நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகம் குறித்து பல்வேறு புகார்களைத் தெரிவித்துள்ளனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். திமுகவின் நடவடிக்கை எப்போதும் வட்டச் செயலாளர், பகுதி செயலாளர் அளவில் நிறைவடைந்துவிடுகிறது. அதைத் தாண்டியும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஸ்டாலினிடம் வலியுறுத்தியுள்ளனர். 


மக்கள் கருத்து

சாய்Feb 2, 2018 - 03:13:12 PM | Posted IP 117.2*****

இன்னம் கிளம்பள்ளியா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads






Friends Track CALL TAXI & CAB (P) LTD

New Shape Tailors

crescentopticals




Johnson's Engineers



Thoothukudi Business Directory